தங்கேஸ்வரி இயற்கை எய்தினார்?


மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கதிர்காமர் தங்கேஸ்வரி இன்று சனிக்கிழமை இயற்கை எய்தியுள்ளார்.
அன்னாரின் நல்லடக்கம் அவரின் சொந்த ஊரான கன்னன்குடாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது மட்டக்களப்பில் தேர்தல் களமிறங்கி வெற்றி பெற்ற அவர் பின்னர் கருணா பிளவையடுத்து கட்சியிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments