சஜித்தே வெல்வார்?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மோதும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது என எகனமிக் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தேர்தலின் முடிவு இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தை தீர்மானிக்கும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் எவரும் போட்டியிடவில்லை, பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் சஜித் பிரேமதாசவிற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையிலேயே முக்கிய போட்டி காணப்படுகின்றது. கோட்டாபய சீனா சார்பு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
தேர்தலை அவதானிப்பவர்கள் சமமான போட்டி காணப்படுவதாக தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள இந்திய ஊடகம் சஜித் பிரேமதாச எதிர்பாராத வெற்றியை பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சஜித் பிரேமதாச கிராம மற்றும் சிறுபான்மையினத்தவர்களை கவரக்கூடியவராக காணப்படுகின்றார் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் ஐந்து வருட அமைச்சர் பதவிக்காலத்தில் எந்த சர்ச்சைகளும் உருவாகவில்லை 2018 இல் அரசியல் நெருக்கடி உருவான வேளை, நிலைமையை ஸ்திரப்படுத்துவதில் சஜித் பிரேமதாச முக்கிய பங்களிப்பை வழங்கினார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
1993 இல் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச கொழும்பின் உயர் குழாமிலிருந்து விலகியிருப்பவர் தன்னை பொதுமக்களின் மனிதானாக சித்தரிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

No comments