நீதிமன்றுக்குள் அருவருப்பாக செயற்பட்ட கோத்தாவின் சட்டத்தரணி!

கோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சில கனிஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோட்டேகொட கடுமையாக எச்சரித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று (04) மாலை 6 மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது.

இதன்போது நீதியரசர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உள்ளிட்டோர் கைதட்டி, கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர்.

இதன்போதே நீதியரசர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து மன்னித் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே என்று ரொமேஷ் டி சில்வா பலதடை மன்னிப்பு கோரினார்.

எனினும் நீதிபதி கோட்டேகொட "கறுப்பு உடைபோட்டுக்கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுவது சட்டத்துறைக்கு அவமானமான செயல். இது கவலையான, அதிர்ச்சிக்குரிய அருவருப்பான நடத்தை. இத்தகைய நடத்தையில் எந்தவொரு வழக்கறிஞர்களும் ஈடுபடுவதில்லை. ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

No comments