கோத்தாவிற்கு பதிலாக சமல் அல்லது சிராந்தி?


ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர் மீதான வழக்கு காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படுமானால் அவருக்குப் பதிலாக அவரின் சகோதரரும் , முன்னாள் சபாநாயகருமான் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு அந்தக் கட்சி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று(03) இரண்டாவது நாளாக விசாரணைகள் இடம்பெற்றன.
இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் குறித்த மனு மீதான பரிசீலனைகள் நடைபெறவுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கையான இடைக்கால தடையை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்றைய தினம்(04) நீதிமன்றம் தீர்மானிக்குமென எதிர்ப்பார்க்கபப்டுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments