கோத்தாவின் எடுபிடிகள் சண்டை:விலக்கு பிடிக்கிறார் குரே?


கோட்டபாய ராஜபக்சவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக வடக்கிற்கு நியமிக்கப்பட்டள்ள முன்னாள் ஆளுநர் பங்காளி கட்சிகளது சண்டை கூட்டமைப்பினை விட கேவலமான சண்டையாகியிருப்பதாக சலித்துக்கொண்டுள்ளார்.

கோத்தாவின் வெற்றியில் பங்காளியாக செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஜனாதிபதி தேர்தலுக்கான வடமாகாண பிரதம அமைப்பாளர் ரெஜினோல்ட் குரே யாழ் சிவலிங்கப்புளியடி ஓட்டுமடம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சந்தித்து அவர்களிடையேயான பிளவை சீர் செய்ய பேச்சுக்கள் நடந்தியிருந்தார்.

தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளினை முன்னெடுத்துவரும் ஈபிடிபி,வரதர் அணி,அங்கயன் அணியென பல தரப்புக்களும் முட்டிமோத தொடங்கியுள்ளன.

ஏற்கனவே தனது கட்சியிலிருந்து வெளியேறிய டக்ளஸை வரதராசப்பெருமாள் மறுதலித்துவருகின்றார்.

இன்னொரு புறம்  அங்கயனோ கொலைகார கும்பலுடன் தன்னை இணைக்கவேண்டாமென சொல்லிவருகின்றார்.

இத்தகைய குழப்பங்களையடுத்து அவசர அவசரமாக சந்திப்புக்களை நடத்திவரும் அவர் மக்களை திசைதிருப்ப கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றார்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு ஜனநாயக தேர்தல் நடாத்தப்பட்டது. இதனை ஆட்சி செய்த தலைவர்கள் புலம்பெயர் வாழ் தமிழர்களின் முதலீடுகளை தட்டிக் கழித்து வடக்கு தமிழ் மக்களின் தொழில்வாய்ப்புக்களை இல்லாமல் செய்தவர்கள் வடக்கை ஆட்சி செய்த தமிழ் தலைவர்வர்களே!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கான அரச காணிகளை வழங்காது இழுத்தடித்து தாய் நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியவர்கள் தமிழ் அரசியல் தலைவர்கள்.

அவ்வாறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொண்டிருக்க முடியும்
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் பெற்ற மறு கணமே வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை தோற்றுவித்து வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments