கூட்டமைப்புடன் பேச தயாரில்லை:கோத்தா?

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முக்கியமான தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் ஐந்து பிரதான தமிழ்க் கட்சிகள் கையொப்பம் இட்டு அதனை அனைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வழங்கி பேச்சு நடத்த முடிவுசெய்திருக்கின்றன.
இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்

No comments