தனியாக இருந்த சிறுவன் மர்மக் கொலை

வலஸ்முல்ல-கட்டுவன, வல்கம்முல்ல பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் இன்று (சனிக்கிழமை) வீட்டில் தனியாக இருந்த வேளை இனந்தெரியாத நபரொருவர் சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரையில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments