தீர்ப்பில் திருப்தி இல்லை;நீதிமன்றிலே தன்னை தானே சுட்டுக்கொண்ட நீதிபதி!

ஆதாரம் இல்லாமல் ஒருவருக்குத் தண்டனை வழங்குவது சரியல்ல என்று கூறி தாய்லாந்தில் நீதிபதி ஒருவர் நீதிமன்றத்திலே தன்னைத்தானே  துப்பாகியால் சுட்டு கொண்டுள்ளார்.

தாய்லந்தின் சட்டமுறை  தவறாக இருப்பதாகவும், எனவே ஒரு
கொலை குற்றச்சாட்டிலிருந்து ஐவரை விடுவிக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதாக கூறி நீதிபதி கனகோர்ன் பியன்சனா துப்பாக்கி ஒன்றை எடுத்து தன் நெஞ்சில் சுட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் தாம் பேசியதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்புச்sசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் தற்போது குணமடைந்து வருவதாகக் கூறப்பட்டது.


No comments