யாழ்ப்பாணத்தில் ஆளை தேடும் ஜேவிபி?


கொழும்பில் காலிமுகத்திடலில் தமது ஆதரவாளர்களை இலட்சக்கணக்கில் திரட்டி பலம் காட்டிய ஜேவிபி யாழ்ப்பாணத்திலோ வெறும் 120 பேருடன் முடங்கிப்போயுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திசாநாயக்க பெரும் பிரச்சாரங்களுடன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஐயத்தின் போது வீழ்ச்சியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவோம் நாம் எனும் தொனிப்பொருளில் யாழ் ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபைக்கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதம அதீதியாகக் கலந்து கொண்டிருந்த அனுரகுமார திசாநாயக்க விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள். ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெரும் பிரச்சாரத்துடன் இன்றைய கூட்டத்திற்கு அழைப்புவிடுத்த போதிலும் தமிழ் மக்களிடையே அது தொடர்பில்; பெரிதாக அலட்டிக்கொள்தல் இருக்கவில்லை.

முன்னதாக மக்கள் சக்தி அமைப்பில் பங்கெடுக்கும் சிவில் அமைப்புக்கள் ஜேவிபி வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை பரிசீலிக்குமென தெரிவித்திருந்தன.ஆயினும் அதனை அனுரகுமார திசாநாயக்க நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments