யாழில் போராட்டம்?


இந்திய அரசினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது யாழில் நடந்துள்ளது.

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள சமாசத்தின் முன்பாக இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அங்கிருந்து பேரணியாக யாழ் மாவட்ட அரச அதிபர் அலுவலகம், வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து நல்லூரிலுள்ள இந்திய துணை தூதரகத்து முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments