சமூக சிற்பிகள் அமைப்புக்கு இரண்டு விருதுகள்

இலங்கையில் பலதரப்பட்ட இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமூக பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யும் வகையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சமூக சிற்பிகள் அமைப்பு (The Social Architects) இலங்கை பிரஜைகளின் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான தமது சிறப்பான நடவடிக்கைகளுக்காக குடியுரிமை பாராட்டு விருதுகள் (Citizenship Appreciation Felicitation Award) இரண்டினை வென்றுள்ளது.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு வெகுசன ஊடக துறை அமைச்சினால் வழங்கப்பட்ட குறித்த விருதினை சமூக சிற்பிகள் அமைப்பின் அம்பாறை மற்றும் பொலனறுவை கிளை அலுவலகங்கள் தனித்தனியே வெற்றிகொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும் குறித்த அமைப்பானது யாழ்ப்பாணம் , அம்பாறை , பொலனறுவை, ஹட்டன் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments