39 சடலங்கள் சட்டவிரோத குடியேறிகளுடையதா! தமிழர்களும் ஏக்கம்;

லண்டனில் உள்ள பிரபல தேம்ஸ் நதிக்கரை அருகே காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன பரிசோதனை நடத்தி வந்தனர். அப்போது வாட்டர்கேல்ட் தொழிற்பேட்டை அருகே சந்தேகப்படும் வகையில் கொள்கலன் பாரவூர்தி  ஒன்று வந்தது. இதனை மடக்கிப்பிடிக்க காவல்துறையினர்  முற்பட்டனர். காவல்துறையினர் பிடிக்க முயற்சிப்பதை கண்ட ஓட்டுனர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

இதனால்  மேன்மேலும் சந்தேகம் அதிகரித்தது. உடனடியாக ஓட்டுனரை தனி அறையில் வைத்து விட்டு, கொள்கலனை பரிசோதித்து பார்த்ததில், அதற்குள் சுமார் 39க்கும் மேற்பட்ட பிணங்கள் இருந்ததை கண்டு காவல்துறையினருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக டிரைவரை விசாரித்ததில், இந்த லாரி பல்கேரிய நாட்டைச் சேர்ந்தது என்றும் ஓட்டுனர் வடக்கு அயர்லாந்தில் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
சுமார் 25 வயது மிக்க இந்த ஓட்டுனர்  பின்னணி என்ன? இந்த பிணங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எதற்காக லண்டனுக்கு நுழைய முயற்சித்தனர்? என்ற கேள்விகள் மற்றும் தேடல்களில் காவல்துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த பிணங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உடலில் ஏதேனும் வெடிமருந்துகள் வைத்து அனுப்பப்பட்டு இருக்கிறதா? இல்லை சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது கடத்தல் நடைபெற்று வருகிறதா? எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதுவரை ஓட்டுனர் வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு தான், எவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றனரா அல்லது இறந்திருக்கின்றனரா? என்ற தகவல்கள் தெரியவரும். அதன்மூலம் வேறு கோணத்தில் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

அதேவேளை பல்கேரியாவில் இருந்து இந்த பாரவூர்தி வந்திருப்பதால் சட்டவிரோத குடியேற்றவாசிகளை இதில் கொண்டுவந்திருக்கலாம் என்றும், இதன்போது ஏதும் விபத்துக்கள் , அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு காவல் அதிகாரி சந்தேகம் வெளிட்யிட்டுள்ளார்.

இதனால் உலகத் தமிழர்களும் பலர் ஏக்கத்தோடு இருக்கின்றனர், தாயகத்தில் இருந்து இப்பொழுதும் பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி வருகின்றனர், இதன்போது பல கடத்தல்காரர்களிடம் மாட்டிகொண்டு இவ்வாறு ஆபத்தான பயணங்களை கடந்துவருகின்றனர், எனவே பல்கேரியாவின் வழியாக பல தமிழர்கள் ஐரோப்பாவை வந்தடந்தைமை குறிப்பிடத்தக்கது , எனவே தமிழர்களும் இந்த சம்பவம் குறித்து மிகவும் கவனிப்போடு இருக்கின்றனர்.

No comments