8வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடைபயணம்

பிரான்சில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கிய நடைபயணத்தில் இன்று 8 ஆவது நாளாக துறோவா மாநிலத்தின் மாநகரசபையின் முன்பாக தமிழினப்படுகொலையின் சாட்சியங்கள் கொண்ட நிழற்படக்கண்காட்சி நடாத்தப்படுகின்றது. துறோவா வாழ் தமிழ் உணர்வாளர்களுடன் மாநகரசபை முன்பாக காலை 10.30மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. ஆரம்பித்தவுடனேயே பல பிரெஞ்சுமக்களும், வெளிநாட்டு மக்களும் வந்து படங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று காலை புறப்பட்ட நடைபயணம் Fontvannes என்ற நகரால் செல்லும் வழியில் தம்தாய்நாட்டின் விடுதலைக்காய் உயிர்கொடுத்த கடற்படையினரின் நினைவாக நினைவுத்தூபி எழுப்பப்பட்டிருந்தது. அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீதிக்கான நடைபயணம் நேற்று 4.30 மணிக்கு துறோவா மாநகரத்தில் மாநகரசபை முன்பாக நிறைவு பெற்றது.

No comments