தமிழர் உரிமையை பறிக்க இடமளியேன் வியாழேந்திரன் முழக்கம்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இத்தியடி பிள்ளையார் ஆலய சுற்று மதில் உடைப்பு தொடர்பாக எஸ்.வியாழேந்திரன் எம்பி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போது கிழக்கில் தமிழர்களது உரிமையை யாரும் தட்டிப்பறிக்க இடமளிக்கப் போவதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், 3 தடவைகள் இவ் ஆலயம் உடைக்கப்பட்டுள்ளது. 80 பேச் அளவுள்ள ஆலயக் காணியானது இரவோடு இரவாக வேலி அமைக்கப்பட்டு 40 பேச் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள இடமானது ஒரு எல்லைக் கிராமமாகும்.

தற்போது தமிழர் குடியிருப்பு இல்லாத வாகனேரி ஜப்பார் திடலில் ஆலயம் அமைக்கப்பட  எடுக்கும் முயற்ச்சி ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதேசசபை உறுப்பினர் ஹமிட் மௌலவி கருத்து வெளியிட்டுள்ளதுடன் தன்னுடைய பெயரை சம்பந்தப்படுத்தி என்னை ஒரு இன வாதியாக குறிபிட்டுள்ளார்.

தமிழர்களது பூர்வீக் எல்லைக் காணிகளை உரிமை கொண்டாடுவது இவர்களைப் போன்றவர்கள்தான். நாங்கள் இவ் மாவட்டத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்த்தலங்களை தாக்கியதும் இல்லை. தாக்கப்போவதும் இல்லை. இந்னொரு இனத்தின் உரிமையை தட்டிப் பறிக்கப் போவதும் இல்லை.ஆனால் கிழக்கில் தமிழர்களது உரிமையை யாரும் தட்டிப்பறிக்க இடமளிக்கப் போவதும் இல்லை. - என்றார்.

No comments