மைத்திரியை தொடர்ந்து சுரேனும் வருகிறார்?


இலங்கை அரசினை தொடர்ந்து அரச ஆளுநரும் வடக்கில் 90 சதவீத காணிகள் விடுவிக்கப்பட்டதான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்
.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு முறையும் தன்னைச் சந்திக்கும் போது, காணிகளை விடுவிக்கமாறு கோருவதாகவும் தன் கையில் அதிகாரம் இருந்தால், உடனே காணிகள் அனைத்தையும் விடுவித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளைத் தவிர, தற்போது மிகுதியாக இருக்கும் காணிகள், விரைவில் கையளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பரில் இதே கருத்துக்களை முன்வைத்த இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன டிசெம்பர் 31ம் திகதியினுள் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்படுமென தெரிவித்துமிருந்தார்.

ஆயினும் தற்போது அது பற்றி பேசாதிருக்கின்ற அவர் தேசிய பாதகாப்பிற்கு குந்தகமின்றி காணி விடுவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். 

No comments