பௌத்த அமைப்புக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

இன்று (01) தொடக்கம் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்ற உத்தரவானது, ´சிங்கள ஜாதிக பலமுலுவ´ என்ற அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. மெடில்லே பஞ்ஞாலோக தேரர் மற்றும் ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கு எதிராகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments