மீண்டும் யாழ்.மாநகரசபைக்கட்டத்திற்கு அடிக்கல்?


தேர்தல் ஆரவாரம் மீண்டும் சுடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் யாழ்.மாநகர நகர மண்டபத்துற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.இம்முறை எதிர்வரும் 7ம் திகதி ரணில் விக்கிரமசிங்காவினால் அது நாட்டி வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே இதே கட்டடத்திற்கென டக்ளஸ் ஏற்பாட்டிலும் முன்னாள் ஆளுநர் சந்திரசிறி ஏற்பாட்டிலும் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆட்சியிலுமாக அடிக்கல்கள் கோலாகலமாக நாட்டப்பட்டிருந்தது.

தற்போது ஆனோல்ட் தலைமையில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ரணில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கென 2019ம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகால அளிவில் குறித்த திட்டத்திற்கான நிதி பகுதி பகுதியாக ஆண்டு ரீதியில் விடுவிக்கப்படவுள்ள நிலையில் முதல் கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.குறித்த மண்டபத்திற்கான பணிகளிற்கு கூறுவிலை கோரப்பட்டு 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபாவிற்கு மேற்படி பணிக்கான ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments