எழுக தமிழ் தொடர்பில் வடமராட்சி அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவையினர் சந்திப்பு!

தமிழ் மக்களின் கூட்டு எழுகையாக எழுகதமிழ் எழுச்சிப் பேரணியை முன்னெடுப்பது குறித்து தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவரும் கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இன்று வடமராட்சி பகுதியில் சந்திப்புகள் நடாத்தப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கடற்றொழில் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுப்பர்மடம் க.தொ.கூ.சங்கம்
இன்பர்சிட்டி க.தொ.கூ.சங்கம்
இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டுக் கழகம்
சக்கோட்டை க.தொ.கூ.சங்கம்
பொலிகண்டி க.தொ.கூ.சங்கம்
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம்
ஆதிகோவிலடி க.தொ.கூ.சங்கம்
வல்வெட்டித்துறை மேற்கு க.தொ.கூ.சங்கம்
வல்வெட்டித்துறை கொத்தியால் க.தொ.கூ.சங்கம்
வல்வெட்டித்துறை வர்த்தகர் சமூகம்
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் என்பவற்றின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பூரண ஆதரவை வழகியுள்ள நிலையில் எழுக தமிழ் முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்து

வடமராட்சி பருத்தித்துறை முதல் வல்வெட்டித்துறை வரையான கடற்றொழில் சங்க நிர்வாகிகளுடன் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டு எழுக தமிழுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து ஆரயப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments