சுதந்திரக்கட்சி அல்லாடுகின்றது:சஜித்திற்கு ஆதரவு?


சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பெயரிடாத ஒரே ஒரு கட்சியாக சுதந்திரக் கட்சி உள்ளது.

இந்த நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா? அல்லது தனியாக போட்டியிடுவதற்கான வேட்பாளரை களமிறக்குவதா? என்பது குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், ரணில் நியமித்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நவீன் திசநாயக்க, எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன, அதன்படி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏதாவது முன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, முன்நிபந்தனைகள் ஏதும் இல்லை, ஆனால் செயற்குழுவினால் சில உடன்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பதிலளித்தார்.

ரணில் விக்ரமசிங்க அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்த முன்மொழிந்துள்ளார். அதற்கு கட்சி அனுமதி அளித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments