பல்கலைக ஆசிரிய சங்கமும் ஆதரவு!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் செப்ரெம்பர் 16 ஆம் திகதி
யாழ் முற்றவெளியில் நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் எழுச்சிப்பேரணி - 2019 நிகழ்விற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் தனது ஆதரவினை வழங்குவதென செப்ரெம்பர் 9 ஆம் திகதிநடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் முன்னெடுக்கப்படடு வரும் போராட்டங்களுக்கு
வலுச்சேர்க்கும்; வகையில்;
1. சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து
2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து
3. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்
4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி
விசாரணை நடாத்து
5. வடக்கு – கிழக்கு ,ராணுவமயமாக்கலை நிறுத்து
6. இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய
,டங்களில் மீளக்குடியமர்த்து
ஆகிய கோசங்களை முன்னிறுத்தி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி -2019 நிகழ்த்தப்படவுள்ளது. இந்தக் கோரிக்கைகளின் முக்கியத்துவம்கருதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுக தமிழ்எழுச்சிப் பேரணி – 2019இ ற்கு ஆதரவளிப்பதெனத் தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அரசியல் கட்சிசார்பற்ற ஓர் அமைப்பாகும். எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகஆசிரியர் சங்கம் எழுக தமிழுக்கு வழங்குகின்ற ஆதரவானது மக்கள் இயக்கம் ஒன்றின் மக்கள்சார் செயற்பாட்டிற்கான ஆதவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments