நடிகர்களின் சம்பளத்தில் கைவைக்கும் தமிழக அரசு!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலையானது நாளுக்குநாள் பரிதாபமாக கொண்டிருக்கும் நிலையில், அதனை சரிசெய்யும் விதமாக கதாநாயகர்கள், கதாநாயகிகளின் சம்பளத்தினை வரையறை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளரிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  தமிழகத்தில் விரைவில் திரைப்பட டிக்கெட்டுகள் இணையத்தின் மூலம்  விற்கப்படும் என தெரிவித்திருந்தார். இது இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த நடவடிக்கைக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முதல் திரைப்பட தியேட்டர் உரிமையாளர்கள் வரை அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில், அது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலும் தயாரிப்பாளர்கள் சுமையை குறைப்பதற்காக நடிகர் நடிகைகளின் ஊதியத்தினை வரையறை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பல தயாரிப்பாளர்கள் கதாநாயகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதாக குறைகூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாம் சினிமா துறையில் புகுத்தப்பட்டால், சினிமாத்துறை மீண்டும் ஆரோக்கியம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

No comments