நல்லாச்சிக்காரர் குறித்து சுமந்திரன் கவலைப்படுகிறாராம்


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி அரசாங்கம் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் யோசனை எதிர்ப்புக்கு மத்தியில் கைவிடப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவரது டுவிட்டர் பதிவில், "நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கும் நல்லாட்சிகாரர் குறித்து கவலைப்படுகிறோம். சந்தர்ப்பவாதமும் சுயநலமும் உச்சத்தை எட்டி கால்நூற்றாண்டு வாக்குறுதிகளை கைவிடுவதா? கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை த.தே.கூட்டமைப்பு ஆதரிக்கும்." இவ்வாறுள்ளது.

No comments