ஆசிரியர்களின் வேலை நிறுத்தம்: மாணவர்கள் பாதிப்பு!

அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் தொழில் சங்கங்கள் இணைந்து  நாடளாவிய  ரீதியில் மேற்கொண்ட இருநாள் சுகயீன விடுமுறை  போராட்டத்தின் காரணமாக அனைத்து பாடசாலைகளினதும், கற்பித்தல்  நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டன. 

இன்றய தினம் நாட்டிலுள்ள  அனைத்து பாடசாலைகளினதும் ஆசிரியர்களின் வரவு மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தன. மாணவர்களின்  வரவில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட  ஆசிரியர்  மற்றும் அதிபர்கள் இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவை  சங்கம் , கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஜனநாயக ஆசிரியர்  சங்கம் , இலங்கை தேசிய அதிபர் சங்கம் உள்ளடங்கலாக முப்பது  சங்கங்களின்  உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

No comments