சூரிய சக்தியில் இயங்கும் தானி, உலகத்தயை சுற்றிவருகிறது!


சூரியச் சக்தியால் மட்டும் இயங்கும் இந்த சிவப்பு நிற தானியில்  (ஆட்டோவில்) ஐவர் உலகத்தைச் சுற்றி வருகின்றனர.
கரியமில வாயு வெளியேற்றம் ஏதுமில்லாமல் பயணம் செய்யமுடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பது இவர்களின் நோக்கமாகும்.
பயணத்திற்கிடையே மறுபயனீட்டு எரிசக்தி பற்றி சமூகங்களுக்கு எடுத்துக் கூறுவர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளையர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் தங்களின் தானியில் பயணத்தைத் தொடங்கினர்.
அவர்கள் ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு தாய்லந்துக்குச் சென்றனர். அங்கிருந்து இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் பெங்களூரில் உள்ளனர்.
அடுத்து ஈரான், துருக்கி, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

No comments