கோத்தாவா அலறும் சுதந்திரக்கட்சி?


ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் சேர்வதன் மூலம் கோத்தபாயவை ஜனாதிபதியாக்க சுதந்திரக்கட்சியை சேர்ந்த பலரும் அஞ்சிவருகின்றனர்.தம்மை முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதும் மதிக்காத கோத்தா ஜனாதிபதியானால் கண்டுகொள்ளமாட்டாரென அவர்பன் கருதுகின்றனர்.

அதனால் சுதந்திர கட்சிக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் வௌ;வேறு கருத்து வேறுபாடுகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதந்திர கட்சி இணையாவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெற்றிபெற முடியும் என பாராளுமன்ற உறுப்பனர் றொஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் சுதந்திரக்கட்சி வாக்கினைப்பெற பொதுஜனபெரமுன முனபை;பு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments