ரணில் பொய் கூறுகிறார், அவர் மோசமான ஊழல்வாதி - சிறிசேன தாக்கு

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நானே அழைத்ததாக பிரதமர் பொய் கூறுகிறார். அமைச்சரவை பத்திரத்தை அனுப்பிவிட்டு அதனை அவர் இரகசியமாக திரும்பப் பெற்றுக் கொண்டார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வில் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

ஜனநாயகம் தேவை என்றே மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தனர். ஊழல், வன்முறை ஆட்சி இருந்ததால் நான் ஜனாநாயகத்தை ஏற்படுத்தினேன்.

ஆனால் பிரதமர் தனிப் பயணம் ஒன்றை ஆரம்பித்து கடந்த அரசை விட மோசமாக ஊழல் செய்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் முப்படைகளின் பலத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகங்களை செய்தனர். இதுவரை நான் அப்படி எதையும் செய்யவில்லை. - என்றார்.

No comments