"திலீபன் வழியில் வருகிறோம்" நடை பயணத்தில் பொலிஸாரால் தடங்கல்


திலீபன் வழியில் வருகிறோம் எனும் தொனிப் பொருளில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் இன்று (21) காலை வவுனியா நகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இருந்து ஆரம்பமாகி நடைபெறுகிறது.

இந்த நடைபயணம் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை தாண்டி பசார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிசார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதனால் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிசாரால் பணிக்கபட்டது. அதன் பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும் ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி ஏற்பாடு செய்துள்ளது இந்த நடைபயணம் "பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்!" ஆகிய கோரிக்கைகை முன்வைத்தே நடைபெறுகிறது.

இதற்கு வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் ஆதரவு வழங்கி கலந்து கொண்டுள்ளனர்.

No comments