பொலிஸார் மீது துப்பாக்கி சூடு; அதிகாலையில் பரபரப்பு

மாத்தறை - அக்குரெஸ்ஸ, திப்பட்டுவாவ சந்தியில் பொலிஸார் இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேககத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர். இதன்போது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments