சற்றுமுன் பேருந்துக்குள் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

இன்று காலை 8.05 மணி அளவில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினுள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் அதில் பயணித்த மற்றுமொரு பயணி மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments