தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவேன்- சஜித் சபதம்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகளவான அதிகாரப்பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதுடன், மாகாண சபையை பலப்படுத்தி அதிகாரங்களை வழங்கத் தயார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்டர்ப்ரஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் "நீங்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தமாதிரியான தீர்வுகளை வழங்குவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

ஒரே நாட்டுக்குள் அதிகளவான அதிகாரப்பகிர்வை வழங்கி அதனூடாக அரசியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் போன்றவற்றை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.

13ம் திருத்தச் சட்டம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்தி மக்களுக்கான சிறந்த சேவையை முன்னெடுக்க எண்ணியுள்ளேன். - என்றார்.

No comments