சஜித்துக்கு தடை விதித்தார் ரணில்; ஏன் தெரியுமா?

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியை நடாத்த வேண்டாம் என குறித்த தரப்பினர்களுக்கு கட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணி, கட்சித் தலைவரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல் இடம்பெறும் செயற்பாடு என பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக, தான் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments