வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை!

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்ப்பளித்துள்ளது.

புங்குடுதீவில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நபரொருவரை படுகொலை செய்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட வழக்கிலேயே இன்றைய தினம் குற்றவாளியாக காணப்பட்ட குறித்த இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்  தீர்ப்பளித்தார்.

No comments