நடேசு பிரியா குடும்பத்தை நாடு கடத்தாமல் இருக்க இணக்கம்?

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினர், விரைவில் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் - பிரியா மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் குறித்த நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் குறித்த குடும்பத்தை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த குடும்பத்திற்கு ஆதரவு வலுத்துவருவதால் அந்தக் குடும்பம் மீண்டும் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது என்று உயர்மட்ட அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக சில செய்தித் தளங்களை மேற்கோள்காட்டி SBS செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments