கண்காட்சிக்கு 6கோடி:காணாமல் போனோருக்கு 6ஆயிரமாம்?


ஆறு கோடி செலவளித்து கண்காட்சி நடத்தும் இந்த அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிற்கு ஆறாயிரம் ரூபாய் பிச்சைக்காசு வழங்குவது பற்றி பேசுவதாக சுதேச மக்கள் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் அ.மதிராஜ் மேலும் தெரிவிக்கையில் 

நேற்று இலங்கை நிதி அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஊடாக காணாமல் போனோர் குடும்பங்களிற்கு ஆறாயிரம் ரூபாய் பிச்சைக்காசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஆனால் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கும் குறையாத ஊதியம் வழங்கப்படுகின்றது.

தற்போது தேர்தல் வரவுள்ளதால் எமது மக்கள் மீது அக்கறையுள்ளதாக காண்பிக்க தெற்கு பாடுபடுகின்றது.

அதற்காக அவர்கள் பல கோமாளி கூத்துக்களை அரங்கேற்றிவருகின்றனர்.
நல்லாட்சி மைத்திரி பொறுப்பேற்று இன்றுடன் 1683 நாட்கள் ஆகின்றது.

காணிப் பிரச்சினை,காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையென எமது மக்கள் வீதிகளிலேயே காத்திருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள அக்கட்சி எமக்கு தேவையில்லாத கண்காட்சிக்கு ஆறுகோடி அள்ளி கொட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.  

No comments