எழுக தமிழுக்கு ஆதரவுகோரி கிளி. பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி நிகழ்வுக்கான ஆதரவுகோரி கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளுடன் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களை பல்வேறு தளங்களில் பிரதிநிதித்துவம் செய்துவரும் பொது அமைப்புகளையும் சமூகமட்ட அமைப்புகளையும் நேரில் சென்று சந்திப்புகளை மேற்கொண்டுவருவதன் தொடர்ச்சியாக இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினரால் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில்,

• பள்ளிக்குடா க.தொ.கூ.சங்கம்
• பூநகரி க.தொ.கூ.சங்கங்களின் சமாசம் (16 சங்கங்களை உள்ளடக்கியது)
• கிளிநொச்சி மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் சம்மேளனம் (72 அமைப்புகளை உள்ளடக்கியது)
• திருநகர் பகுதிவாழ் சமூக செயற்பாட்டாளர்
• கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கம்
• கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியைச்சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள்
• கண்டாவளை க.தொ.கூ.ச.சமாசம் (5 சங்கங்களை உள்ளடக்கியது)
• கிளிநொச்சி மாவட்ட க.தொ.கூ.ச. சாமாசங்களின் சம்மேளனம் (25 சங்கங்களை உள்ளடக்கிய 3 சமாசங்களுக்கானது)
• பூநகரி வர்த்தகர் சங்கம்
• கிளிநொச்சி மாவட்ட வர்த்தக விவசாய கடற்றொழில் சம்மேளனங்களின் இணையம்

ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி குறித்த தகவல்கள் வழங்கப்பட்டதுடன் பளை க.தொ.கூ.சங்கங்களின் சமாச (4 சங்கங்களை உள்ளடக்கியது) நிர்வாகத்தினருடன் மேற்குறித்த விடயம் குறித்து தொலைபேசியில் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுமிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments