தாய் - மகளை கடத்த முயற்சி; திடுக்கிடும் பின்னணி


களுத்துறை, நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் 8 வயது மாணவியையும் அவரது தாயாரையும் இன்று (22) கடத்த முயன்ற இருவரை தொடங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி இரு ஆண்டுகளுக்கு முன்னர் வருடாந்த பாடசாலை பரிசளிப்பு விழாவில் கூடுதலான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் காணப்பட்ட நீண்டகாலம் முரண்பாடு காணப்பட்டது. இதனடிப்படையில் இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இந்த மாணவியின் தந்தையார் நாகொட வைத்தியசாலையின் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments