இம்முறையாவது தாக்குப்பிடிப்பரா கவுதமன்!

தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் இயக்குனருமான வ. கவுதமன் விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்  போட்டிஇடுகிறார் . இதற்காக இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனுவை கவுதமன் இன்று தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கனவே கடந்த இந்திய மக்களவை தேர்தலில் துத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு செலுத்தி, சீமானின் ஆதரவு கேட்டும் கிடைக்காத நிலையில் , பின்னர் தமக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்று கூறி தேர்தலில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் இவர் இம்முறையும் இருபெரும் கட்சிகளுக்குநடுவே , சீமானின் நாம்தமிழர் கட்சியும் போட்டியிடும் என்ற நிலையில் இருக்க இந்த தேர்தலிலும் தாக்குப்பிடிப்பரா என்று பொறுத்திருந்துதான் பாக்கவேண்டும்.

No comments