மகிந்தவும்,கோத்தாவுமே காணாமல் போதலுககு பொறுப்பு!


யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றத்துக்கு கட்டளை அனுப்பும்  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பிரசார காலத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வரமுடியாது என, முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெள்ளைவான் கடத்தல்களை முன்னெடுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தான் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிடவுள்ளார் என்பதை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கருத்து  வெளியிட்டுள்ள அவர் , 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகனின் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சாட்சியமளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச, இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வருகைதர வேண்டியிருந்தது.

ஆனால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து ஒரு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தான் யாழ்ப்பாணம் வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்ட கட்டளை ஒன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவர், இன்றைய தினம் (27)  விசாரணைக்கும் வருகை தரவில்லை. 
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு வழக்கிற்கு வர முடியாது. பாதுகாப்பு இல்லை என கூறும் ஒருவர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கும் எவ்வாறு வர முடியும். மே உட்பட ஜூன் மற்றும் இம்மாதமும் விசாரணைக்கு வர முடியாதென்றும் தனக்கு பாதுகாப்பு போதாதென்றும் கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகனின் பிரச்சினைகள் மட்டுமன்றி, 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் இராணுவத்திடமும் இராணுவத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட குழுக்களிடமும் இருந்தன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சகலரின் பிரச்சினையையும் மஹிந்த அராங்கமும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினருமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் குமார் குணரட்ண தெரிவித்தார்.

No comments