கஞ்சாவுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டிய பகுதியில் 30 கிலோ 480 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments