திருட முயன்ற நபர் மடக்கி பிடிக்கப்பட்டார்

திருடச் சென்ற இளைஞரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ​நேற்று (13) மதியம் யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுவதற்கு சென்ற இளைஞர், சத்தம் கேட்டதுடம், ஓடி வந்து முச்சக்கரவண்டியில் ஏறி ஓடுவதற்கு முற்பட்டுள்ளார். அந்த வேளையில், பிரதேச மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்படுயப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மேற்படி இளைஞர் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஆள் அடையாள அட்டை இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments