சுரேஷ் காமாட்சியுடன் கூட்டுச் சேர்ந்த நீலச் சட்டை மாறன்!

லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களை கவரும்  யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் 'ப்ளூசட்டை' மாறன்.   பல படங்களை விமர்சனம் செய்து வாங்கிக்கட்டிய  நீல சட்டை மாறன் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ஒரு நாள் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படத்தில் நடிக்க அனுபவம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் நீல சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.  நீல சட்டை மாறனின் இந்த அறிவிப்பால் பலர் அவர் எடுக்கப்போகும் படத்திற்காகக் காத்திருக்கின்றனர். இவர் திரைத்துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments