துப்பாக்கி சூடு?


பொலிஸாரின் கட்டளைக்கு படியாமல் சென்ற வாகனமொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மாடுகளை களவாக எத்திச்செல்வதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது .வேகமாக வந்த வாகனத்தை நிறுத்துமாறு குறித்த சாரதிக்கு பொலிஸார் அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர் . ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் செல்லவே , பொலிஸார் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்பொழுது குறித்த வாகனத்தில் பயணித்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, மற்றுமொருவர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணையின் பொழுது திருடப்பட்ட காளை மாடுகள் இறைச்சியாக்கப்பட்டு குறித்த வாகனத்தின் மூலமாக மாத்தறை பிரதேசத்துக்கு கொண்டுச் சென்ற விடயம் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மீஎல்ல பிரதேசத்தில் வசித்து வரும் 44 வயதுடையவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments