இருப்புக்கான பிரதிபலிப்பாக எழுக தமிழாய் எழ வாருங்கள்!

"ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக தமிழ் மக்களின் இருப்புக்காண பிரதிபலிப்பாக எழுக தமிழை பாருங்கள்" என்று மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார்.

16ம் திகதி யாழ்பாணத்தில் இடம் பெறவுள்ள எழுக தமிழ் பற்றி இன்று (14) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாரும் அரசியல் இலாபம் கருதியோ மக்களை திசை திருப்பும் நோக்கிலோ எழுக தமிழ் நிகழ்வை பார்ப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொடர்ச்சியாக எமது தமிழ் மக்களின் இருப்பை இவ்வாறான நிகழ்வுகள் போராட்டங்கள் புறக்கணிப்புக்கள் மாத்திரமே சர்வதேச ரீதியில் கொண்டு சேர்க்கின்றது.

எமக்குள் இருக்கும் பிரிவுகளை ஒரு கணம் மறந்து சர்வதேசத்திற்கு மாத்திரம் அல்ல எமது நாட்டு அரசியல் தலைமைகளுக்கும் எமது இருப்பை காட்ட  வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எமக்குள் ஆயிரம் ஆயிரம் மனக் கசப்புகள் இருக்களாம். ஆனாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக எமது கரங்கோர்த்து எழுக தமிழ் எழிச்சி நிகழ்வுக்கு ஒன்று திரண்டு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

No comments