அமைச்சரவையில் கடும் தர்க்கம்; நிறைவேற்று அதிகார ஒழிப்பு யோசனை கைவிடப்பட்டது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக இன்று அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்ட யோசனை பெரும்பான்மையான அமைச்சர்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை தொடர்பில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர இடையில் பலமான கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டு பெரும்பான்மையான அமைச்சர்களின் எதிர்ப்பை அடுத்து இந்த யோசனை கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,

"ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைப்பறி விவாதிப்பதில்லை என்று விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பெருமான்மையான அமைச்சர்கள் !நாங்கள் தேர்தலுக்கு செல்வோம், வெற்றி பெறுவோம் என்று அறிவித்துள்ளனர்" என்றார்.

No comments