எழுக தமிழ்-2019 இற்கு ஆதரவளித்து பலம் சேர்த்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஊடக அறிக்கை
19.09.2019

அன்பான தமிழ் மக்களே!

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் ஏற்படுத்திச் சென்ற மனக்காயங்களின் பாதிப்புகள் ஒருப்பகம் எம்மை அழுத்திக் கொண்டிருந்த போதிலும் அதனையும் கடந்து நீதிக்கான முன்னெடுப்புகளை மக்கள் தாமாகவே மேற்கொள்ளும் புறச்சூழலை எழுக தமிழ்-2016 ஏற்படுத்தியிருந்தது.

2009 இன் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலானது தேர்தல் சகதிக்குள் மூழ்கியுள்ள பின்னணியில் நம்பிக்கையிழந்த நிலையில் தான் எம் மக்கள், தமது பூர்வீக நிலங்களை மீட்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கவும், சட்டவிரோதமான முறையில் சிறையிலடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்கவுமாக இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு நீதிகேட்டு தாமாகவே முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வகையிலான போராட்டங்களில் அப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே தம்மை வருத்தி ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களது கோரிக்கைகளை தமிழ்த் தேசத்தின் குரலாக உலகத்தார் முன் எடுத்தியம்பும் வகையில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ்-2019 நிகழ்வை காலத்தின் தேவையறிந்து ஏற்பாடு செய்து மக்கள் பங்கேற்புடன் நடாத்தியுள்ளது.

பல்வேறு வகையிலான புறச்சூழல்கள் சாதகமற்றதன்மையினை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் தேசமாக் நாம் ஒன்றிணைந்து தமிழர்களது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற உணர்வுடன் வடக்கு கிழக்கு தழுவியதாக வருகைதந்தும், அன்றைய தினத்தில், வழமைமறுப்பினூடாக தமது அன்றாட செயற்பாடுகளை முடக்கி தார்மீக ஒத்துழைப்பினை நல்கியும் ஆதரவளித்து பலம்சேர்த்த அனைத்து தரப்பினருக்கும் இந்நேரத்தில் சிரம்தாழ்த்தி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ்-2019 தொடர்பான முன்னெடுப்புகளை வெகுஜன பரப்பிற்கு கொண்டுசேர்க்கும் பணியை செவ்வனே செய்த தாயக ஊடகவியலாளர்களுக்கும் அதற்கான களத்தினை அமைத்துக் கொடுத்த ஊடக நிறுவனத்தாருக்கும், கடல்கடந்து செயற்பட்டுவரும் தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழுணர்வுடன் எழுக தமிழ்-2019 இல் பங்கேற்ற மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒத்துழைத்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது தவிர பணிச்சூழல் காரணமாக நேரடியாக பங்கேற்கவோ, ஒத்துழைக்கவோ முடியாத நிலையிலும் உள்ளார்ந்தமாக எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் நல்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிலம்-புலம்-தமிழகம் இணைந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைக்குரலை உலகறியச் செய்யும் வகையில் கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஜெனீவா மற்றும் தமிழ்நாடு ஆகிய நாடுகளிலும் எழுக தமிழ்-2019 ஆதரவுப் பேரணிகளை முன்னெடுத்திருந்த தரப்பினருக்கும், அறிக்கைகள் மூலமாக ஆதரவினை வெளிப்படுத்திய புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தாயகத் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் தேசமாக அணிதிரள வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு தமது பூரண ஆதரவினை வழங்கிய கீழ்வரும் சமூக மட்ட அமைப்புகள், தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளுக்கும் தன்னார்வ செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ் மக்களின் உரிமை சார்ந்தும், நீதிக்காகவும் நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து பலம்சேர்க்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

1- யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
2- யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்
3- யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கம்
4- கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
5- மன்னார் பிரஜைகள் குழு
6- தமிழர் மரபுரிமைப் பேரவை
7- திருகோணமலை தென் கயிலை ஆதீனம் - குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்
8- வீணா கான குருபீடம் சிவஸ்ரீ சபாரட்ண சர்மா வாமதேவ குருக்கள்
9- யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம்
10- நல்லை ஆதீனம் - குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
11- யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிதாகாசானந்தா
12- சர்வதேச இந்து குருமார்கள் ஒன்றியம் - வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள்
13- செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் - ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
14- தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம், திருகோணமலை
15- திருகோணமலை தமிழர் செயலணி
16- திருகோணமலை மாவட்ட மகளீர் ஒன்றியம்
17- புழுதி அமைப்பு, திருகோணமலை
18- ஆறுதல் அமைப்பு
19- மட்டக்களப்பு மாவட்ட இந்து மத குருமார்கள் ஒன்றியம்
20- மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம்
21- மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம்
22- ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்
23- வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமையம்
24- யாழ் பாரஊர்திகள் சங்கம்
25- யாழ் ஊடக அமையம்
26- விஞ்ஞான உலகம் (ளுஊஐநுNஊநு றுழுசுடுனு) தனியார் கல்வி நிறுவனம்
27- வல்லமை பெண்கள் அமைப்பு
28- வட மாகாண பெண்கள் அமைப்பு
29- யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்
30- வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
31- வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
32- யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
33- கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம்
34- மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
35- பளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
36- கண்டாவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
37- பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
38- யாழ்ப்பாண பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
39- ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
40- காரைநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
41- நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
42- வேலனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
43- வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
44- வலிகாமம் தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
45- பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
46- நாச்சிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
47- தேவன்பிட்டி புனித சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
48- மூன்றாம்பிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
49- வலைப்பாடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
50- பேசாலை ஓலைத்தொடுவாய் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
51- இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
52- கத்தாளம்பிட்டி யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
53- இரணைதீவு இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
54- கட்டைக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
55- ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
56- உடுத்துறை 10ம் வட்டார கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
57- உடுத்துறை 9ம் வட்டார கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
58- வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
59- மருதங்கேணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
60- தாளையடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
61- அம்பன் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
62- செம்பியன்பற்று கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
63- நாகர்கோவில் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
64- மணற்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
65- பொற்பதி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
66- குடத்தனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
67- கற்கோவளம் தேவன்பிட்டி சவேரியார் விளையாட்டுக் கழகம்
68- பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
69- பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
70- பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
71- மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
72- இன்பர்சிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
73- சக்கோட்டை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
74- பொலிகண்டி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
75- வல்வெட்டித்துறை கொத்தியால் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
76- வல்வெட்டித்துறை மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
77- பலாலி அன்ரனிபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
78- ஆவளை அன்னை வேளாகன்னி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
79- காங்கேசன்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
80- யாழ் பிராந்திய கூட்டிணைக்ப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையம்
81- அச்சுவேலி சிற்றூர்திகள் சேவை சங்கம்
82- வடமராட்சி சிற்றூர்திகள் சேவை சங்கம்
83- மன்னார் மாவட்ட பொது அமைப்புகள்
84- சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யம்
85- வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு
86- யாழ்-மாதகல்(787) சிற்றூர்திகள் சேவை சங்கம்
87- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்
88- மன்னார் சமூக வளர்ச்சியின் மாற்றம் அமைப்பு
89- வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்
90- வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளின் சம்மேளனம்
91- ஆதவன் விளையாட்டுக் கழகம், வவுனியா
92- தமிழ் விருட்சம், வவுனியா
93- நியூ வன் விளையாட்டுக் கழகம், வவுனியா
94- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுனுளு மற்றும் றுசுனுளு சமாசம்
95- யாழ் சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
96- வடமராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
97- தென்மராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம்
98- மன்னார் நகர வர்த்தக சங்கம்
99- கிளிநொச்சி வர்த்தக சங்கம்
100- யாழ் வணிகர் கழகம்
101- நெல்லியடி வர்த்தக சங்கம்
102- பருத்தித்துறை வர்த்தக சங்கம்
103- கொடிகாமம் வர்த்தக சங்கம்
104- சாவகச்சேரி வர்த்தக சங்கம்
105- சுன்னாகம் வர்த்தக சங்கம்
106- சங்கானை வர்த்தக சங்கம்
107- மானிப்பாய் வர்த்தக சங்கம்
108- புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம்
109- பூநகரி வர்த்தக சங்கம்
110- நெல்லியடி சந்தை வியாபாரிகள்
111- திருநெல்வேலி சந்தை வியாபாரிகள்
112- தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம்
113- மயிலிட்டித்துறை வடக்கு (யாஃ251) கிராம அபிவிருத்தி சங்கம்
114- மயிலிட்டித்துறை வடக்கு (யாஃ251) மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்
115- மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்
116- மருதங்கேணி (யாஃ429) கிராம அபிவிருத்தி சங்கம்
117- நாச்சிக்குடா கிராம அபிவிருத்தி சங்கம்
118- நாச்சிக்குடா சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்
119- தேவன்பிட்டி சென் சேவியர் விளையாட்டுக் கழகம்
120- தேவன்பிட்டி சவேரியார் விளையாட்டுக் கழகம்
121- தேவன்பிட்டி மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்
122- வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகம்
123- வலைப்பாடு சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழகம்
124- பொன்னாவெளி (கிளிஃ76) கிராம அபிவிருத்தி சங்கம்
125- வலைப்பாடு ஜெகமீட்பர் சனசமூக நிலையம்
126- ஓலைத்தொடுவாய் விளையாட்டுக் கழகம்
127- மூன்றாம்பிட்டி சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம்
128- அன்புபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம்
129- பருத்தித்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்
130- வல்வெட்டித்துறை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம்
131- குரும்பைகட்டி சனசமூக நிலையம்

தமிழர் தேசத்தின் இருப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் தமிழ் மக்களுக்கான நீதியையும் இடித்துரைக்கவல்ல மக்கள் திரட்சியை தேசமாக அணிதிரட்டவல்ல ‘எழுக தமிழ்’ நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கவும், தமிழர் தேசமும், தமிழ் மக்களும் எதிர்நோக்கும் வாழ்வுரிமைப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கும், தமிழர் பெரும்பரப்பில் செயலாற்றிவரும் அனைத்து தரப்பினரும் சகல பேதங்களையும் கடந்து எழுக தமிழாய் ஒன்றிணைய வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

நன்றி.

தமிழ் மக்கள் பேரவை.
19.09.2019

No comments