கிளிநொச்சியில் இலக்கிய சந்திப்பு?


போர் முடிவின் பின்னராக கடந்த இரண்டு நாளாக இலக்கியச் சந்திப்பு என்கிற பெயரில் கிளிநொச்சியில் கும்பலொன்று கடைவிரித்துள்ளது.

வரதராசாப்பெருமாளிற்கும் அவரோடு கூட்டு சேர்ந்து கோத்தபாயவிற்கு உயிரூட்ட முற்படுகின்ற கும்பலொன்றின் வரவாக இது பார்க்கப்படுகின்றது. 

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து கொடூர கொலைகள், கொள்ளைகள் என மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் புரிந்த இந்த கும்பல்கள் 1990 களுக்கு பின்னால் புலிகள் எழிச்சி அடைய வெளிநாடுகளில் பதுங்கி கொண்டனர் . வெளிநாடுகளில் இருந்தவாறு தலித் மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்) , இலங்கை ஜனநாயக ஒன்றியம்- எஸ்.எல்.டி.எப் (இங்கிலாந்து) , புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான சர்வதேச அமைப்பு (ஐஎன்எஸ்டி-ஜெர்மனி) , இலங்கை தமிழ் மொழிச் சமூகங்களின் கூட்டமைப்பு (இங்கிலாந்து) போன்ற அமைப்புக்களின் பெயரில் இவர்கள் இலங்கை அரச புலனாய்வு அமைப்புகளோடு சேர்ந்து இயங்குபவர்களாகவும் , இலங்கை,இந்தியா அரச ஒட்டுக்குழுகளான பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார், பிள்ளையான் ,கருணா, சிறீரெலோ குழு போன்றவர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி இந்த அமைப்புக்களைச் சேர்ந்த பலர் அந்தந்த புகலிட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து செயல்படுபவர்களாகவும் இருந்தார்கள்.தற்போதும் அதே பணியில் இருக்கிறார்கள் .அதுமட்டுமின்றி தலித் மேம்பாட்டு முன்னணி போன்ற அமைப்புகளை உருவாக்கிய இந்த ஒட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் சாதி , பிரதேசவாதம் உருவாக்கி சமூக பிறழ்வை உருவாக்க பலவேறு வழிகளில் 2009க்கு பின்னர் முயற்சித்து வருகிறார்கள்.

இந்த கும்பல்களை இலக்கியம் என்கிற பெயரில சொந்த வருமானத்திற்கு முன்னாள் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மச்சான் கருணாகரன் என்கிற நபர் ஒருங்கிணைக்கும் வேலையை செய்கிறார் .இவர் மகிந்த ராஜபக்சே காலத்தில் சந்திரகுமார் பாராளுமன்றத்தில் இருந்த பொது தனி செயலர் என்கிற ரீதியில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தவர் .மாகாணசபை தேர்தல் காலத்தில் வரதராஜபெருமாள் கும்பலுக்கும் மகிந்த ராஜ்கபசே தரப்புக்கும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்தவர் . இந்த கருணாகரனும் சந்திரகுமாரும் தான் கிளிநொச்சியில் சாராயம் விற்கும் உரிமம் வைத்து இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு கோசத்துடன் உலகெங்கும் பதுங்கி இருக்கும் ஒட்டுக்குழுக்களை கிளிநொச்சியில் இலக்கியம் தொடக்கம் பல்வேறு பெயர்களில் ஒருங்கிணைத்து பணமீட்டுகிறார் கருணாகரன்.எந்த தொழிலும் இல்லாத கருணாகரன் 2009க்கு பின்னர் கிளிநொச்சி வீடு உட்பட சேர்த்த சொத்துக்கள் எல்லாம் ஒட்டுக்குழுக்களை ஒருங்கிணைத்து திருடியவை தான் என கிளிநொச்சி தரப்புக்கள் கூறுகின்றன.

அதிலும் யுத்தத்தில் அனைத்தையும் இழந்த கருணாகரன் இப்போதே கிளிநொச்சியில் ஒரு பண்ணையார் வாழ்வை வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருபுறம் சிறீதரனை திட்டும் வேலையில் இருக்கின்ற இத்தரப்புக்கள் மறுபுறம் மும்முரமாக தமது புலி எதிர்ப்பு கடையினை தமிழர் தாயகத்தில் விரிக்க இலக்கியத்தை துருப்பு சீட்டாக்கியுள்ளன.

இவர்களது இலக்கியத்தை உள்ளுர் மக்கள் கண்டு கொள்ளாத போதும் அதனை பீற்றிக்கொள்ள இவர்கள் மும்முரமாகியிருக்கின்றனர். 

No comments