கோத்தாவிடம் ஜெயானந்தமூர்த்தி?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர், மகிந்த கட்சிப் பக்கம் தாவியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன், சில மாதங்களுக்கு முன்னர் மகிந்த பக்கம் தாவினார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயானந்தமூர்த்தி உள்ளிட்ட சிலர் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துள்ளனர்.
இந்தத் தகவலை பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரான சந்திரகுமார் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அடங்கிய குழுவினருக்கும், பொதுஜன பெரமுனக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மதியம் மட்டக்களப்பின் பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதையடுத்தே இந்தத் தாவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயானந்தமூர்த்தி, உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்தார்.
பின்னர் இலங்கை வந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.
இந்நிலையில், இன்று மகிந்த பக்கம் தாவியுள்ளார்.

No comments