உயர் பதவிகளில் முன்னாள் தளபதிகள்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த பீல்ட் ஆகவும், முன்னாள் விமான படை தளபதி ரொஷான் குனதிலக்க மார்ஷல் ஒப் த எயார்போஸ் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு வளாகத்தில் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பதவி உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 5ம் திகதி வௌியிடப்பட்டிருந்தது. இதன்படியே இன்று ஜனாதிபதியால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments