காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க வைகோ முயற்சி!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தொடர்புகள் அற்று வீட்டுக்காவலில் இந்திய அரசால் வைத்துள்ள நிலையில் அவரை கண்டுபிடித்து வெளியே கொண்டுவரும் நோக்கத்தில்
இந்திய உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 2019 செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள  ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments