முன்னணி ஆரம்பிக்கிறது நடைபயணம்!மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணத்தை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி ஏற்பாடு செய்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய கோரிக்கைகயுடன் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணம் ஆரம்பிக்கவுள்ளது.

தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணத்துடன் யாழ்பாணத்தை நோக்கி சென்றடையும்.

இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க்க அனைவரும் கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments